Icon

தென்பாண்டி நாட்டில்‌ பொதிகை மலையை “சுற்றி இருந்த. பகுதிகள்‌ ஆய்‌ நாடு என அழைக்கப்பட்டது அதாவது இன்றைய கன்னியாகுமரி மாவட்டமும்‌ தாமிரபரணி வரையுள்ள தென்பாண்டிப்பகுதிகளும் ஆய்‌ நாடு என அழைக்கப்பட்டது எனவே கன்னியாகுமாரிக்கும் தாமிரப்ரணி ஆறு பாய்ந்துஒடும்‌ திருநெல்வேலிக்கும்‌ மத்தியிலுள்ள வள்ளியூர்‌ ஆய்‌ நாட்டிலிலுள்ள ஒரு பகுதியாக இருந்துள்ளது என்பது நன்கு புலப்படுகிறது .இந்த ஆய்‌ நாட்டை ஆண்ட அரசன்‌ ஆய்‌ அண்டிரன்‌ ஆவான்‌ இந்த ஆய்‌ நாட்டின்‌ தலைநகராக ஆயக்குடி என்ற ஊர்‌ இருந்துள்ளது பாண்டிய அரசர்களான அரிகேசரிமாறவர்மன்‌ அவனது புதல்வன்‌ கோச்சடையான்‌ ஆகியோர்‌ இந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர்‌ . இவனது வெற்றியை இறையனார்‌. அகப்பொருள்‌உறை, பாண்டிக்கோவை, ஆகியவை குறிப்பிடுகின்றன. கோச்‌... -சடையானின்‌ பேரனே நெடுஞ்சடைய பராந்தகன் என்ற முதலாம்‌ வரகுணன்‌ ஆவான்‌.இவனும்‌ ஆய்வேளிரை வெற்றிகொண்டு அவர்கள்‌ தொடர்ந்து தொல்லைகள்‌ கொடுக்காதிருக்க அவர்களை கண்காணித்துவர கரவந்தபுரம்‌ (உக்கிரன்கோட்டை) என்ற இடத்தில்‌ பெரும்கோட்டை ஒன்றை கட்டி உள்ளான்‌ .இவனே வள்ளியூருக்கு அருகிலுள்ள ராதாபுரம்‌ கோவிலை கட்டியவன்‌ ஆவான்‌