Icon

கொல்லம்‌ 422(கிபி 1266)இல்‌ வள்ளியூரில் குலசேகரப்பாண்டியன்‌, முத்தும்பெருமாள்‌ முகிலம்பெருமாள்‌. பாண்டிபெருமாள்‌.பச்சைபெருமாள்‌, ஆகிய சகோதரர்களான ஐவராஜாகள்‌ குலசேகரபாண்டியன்‌ தலைமையில்‌ வள்ளியூரில்‌ கோட்டை அமைத்து ஆண்டு வந்தனர்‌. தமது கோட்டைக்கு குடிநீர்‌ வசதிக்காக கோட்டைக்குள்‌ நீராவி என்கிற ஒரு குளத்தை அமைத்து அந்த குளத்திற்கு வள்ளியூரின்‌ மேற்கு திசையில்‌ அமைந்துள்ள சீவலப்பேரி என்கிற பெரிய குளத்தில்‌ வடக்கு பகுதியில்‌ இருந்து முற்றிலும்‌ கருங்கற்களைக்‌ கொண்டு. ரகசியமாக ஒரு கள்ள மடையையும்‌ தண்ணிர்‌ பாயும்‌ ஓடையை பூமிக்கு அடியில்‌ கோட்டையில்‌ உள்ள நீராவி வரை அமைத்து இருந்தனர்‌