Icon

அருள்மிகு ஐவராஜாக்கள் ஸ்ரீநீராவிக்கரை
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில்

photo
photo
photo
photo
photo
photo
photo
photo
photo
photo
photo
photo
photo
photo
photo
photo

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வள்ளியூர் ஐவராஜாக்கள் மண்டபம் அருள்மிகு ஸ்ரீநீராவிக்கரைச் சுடலைமாடசுவாமி திருக்கோவில்

ஐவர்ராஜா

திருநெல்வேலி மாவட்டம்‌, இராதாபுரம்‌ தாலுகா, வடக்கு வள்ளியூர்‌ கிராமம்‌, பத்து கிலோமீட்டர்‌ பரப்பளவு, கொண்ட ஊர்‌ ஆகும்‌. இந்தக்‌ கிராமத்தில்‌ ஈசான மூலையில்‌ அருள்மிகு நீராவிக்கரைச்‌ சுடலை ஆண்டவர்‌ திருக்கோவில்‌ அமைந்துள்ளது.

ஐவராஜாக்கள்‌ ஆட்சிப்‌ பொறுப்பை ஏற்றுக்கொண்டு முதல்‌ முறையாகக்‌ கிராமத்து மக்களைச்‌ சந்திக்க நகரை வலம்‌ வந்தார்கள்‌. அனைத்து வழிபாட்டு ஆலயங்களையும்‌ தரிசித்து வரும்‌ போது ஐவராஜாக்கள்‌ ஐந்து பேர்களின்‌ மனதிலும்‌ தங்களுடைய கோட்டைக்குக்‌. காவல்‌ தெய்வம்‌ குடிகொள்ள ஆலயம்‌ நிர்மாணிக்க வேண்டும்‌ என்ற கருத்து ஒற்றுமை தோன்றியது.

Read More

ஐந்து பாண்டியர்கள்

விஜயாலய சோழர்களின் ஏகாதிபத்திய ஆக்ரமிப்பு கொள்கைக்கு எதிப்பு தெரிவிக்க முனைந்த பாண்டியர்கள் ஐந்து பாண்டியர்கள் ஆனார்கள். அதன் பிறகு முஸ்லிம் அரசர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க கன்னடியர்களின் உண்மையான நோக்கத்தை தென்பாண்டி நாட்டு மக்கள் உணராததாலும் கன்னடியர்கள் பாண்டியர்களின் எதிரிகள் என்று தவறாக எண்ணியதாலும் தொடர்ந்து அவர்கள் ஐந்து பண்டியர்களாக இருந்து கன்னடியர்களை எதிர்த்து போரிட்டனர்.

நமது பாரத நாடு மிகப் பழமையான நாடு,இராமாயணம் ,மஹாபாரதம் போன்று காவியங்களையும் பல சரித்திரங்களையும் தன்னகத்தே கொண்ட தனிசிறப்புடையது. புறானகாலத்சில் இருந்தே ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளும் பல மன்னர்களால் அரசாலபட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக நாட்டில் எல்லா மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்களும் , கோட்டைகளும் , பல வரலாற்று நூல்களும் அதன் சிறப்பை இன்றும் உலகுக்கு பறை சாற்றி கொண்டு இருக்கிறது . நமது நாட்டின் தனிசிறப்பு வாய்ந்த தமிழகத்தின் தென் பகுதில் வீரம் செறிந்த திருநெல்வேலி சீமையில் தென் குமரி கடலோரம் காஷ்மீர் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ராதாபுரம் தாலுகாவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம் முருக பெருமானின் குடைவரை கோவில் கொண்ட வள்ளியின் பெயரால் அமைந்து உள்ள ஊர் வரலாற்று சிறப்பு மிக்க வள்ளியூர் . இவ்வூர் கி.பி. நூற்றாண்டில் அள்ளியுண்ட ராஜாவால் பிரபல்படுதப்பட்டதால் அள்ளியூர் எனவும் , இங்கு மிகபெரிய சமணப்பள்ளி இருந்ததால் பள்ளியூர் எனவும் . இவ்வூரில்உள்ளி (சிறிய வெங்காயம்) அதிக விளைச்சல் செய்வதால் உள்ளியூர் பெயர் பெற்ற சிறப்பை பெற்ற ஊராகும்.