Icon

உலகின் எந்த பகுதியின் உண்மை வரலாறு தெரியவேண்டும் என்றாலும், அப்பகுதியின் வரலாற்று நிகழ்வுகள் நன்கு தெரிந்து இருக்க வேண்டியது அவசியம். அவ்வரலாற்று நிகழ்வுகளில் முதலில் வருவது சங்ககாலம் ஆகும். வள்ளியூர் வரலாற்றுச் செய்திகள்

  • புராண காலத்தில் வள்ளியூர் என்று பெயர் பெற்ற இத்திருத்தலம் கிபி 6 நூற்றாண்டில் உள்ளியூர் என்றும் பள்ளியூர் என்றும் வழங்கப்பட்டது .
  • சமணர்கள் காலத்தில் இவ்வூரில் புரணகிரி மலைக்கு மேற்கே தற்போதைய நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள இடத்தில் பெரிய சமணப் பள்ளி இருந்ததால் இவ்வூர் பள்ளியூர் என்ற பெயர் பெற்றது.
  • கி.பி.1964-1190 மாறவர்மன் ஸ்ரீ வல்லபன் வள்ளியுரை தலைநகராகக் கொண்டு கீழ வேம்பநாடு ,மேல வேம்பநாடு ஆகிய பகுதிகளை ஆட்சி செய்ததாக கோடகநல்லூர் பெரியபிரான் கோவில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
  • கி.பி.1194ல் அள்ளியுண்ட ராஜா குகையின் முன்மண்டபம் கட்டி வள்ளியுரை பிரபலம் செய்ததால் இவ்வூர் அள்ளியுராயிற்று.
  • கி.பி.1195ல் ஸ்ரீ வல்லபமாறன் இத் திருகோவிலில்திருப்பணிகள் பல செய்துள்ளார்
  • கி.பி.1240ல் சோழநாடு கொண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் நிறுவியுள்ள கல்வெட்டில் கப்பலுருடையான் என்பவர் இங்குள்ள மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் திருப்பள்ளியரை நாச்சியாருக்கு பொன் பாடகம் (சிலம்பு) செய்து கொடுத்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் சோழபாண்டியன் என்ற அரசரால் தேர்வு செய்யப்பட்ட தரணி வித்யாதர தனுஸ்தம்பர் என்ற விற்படை வீரர்கள் இவ்வூரில் வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கி.பி.1266ல் குலசேகர பாண்டியனும் அவரது தம்பியர் நால்வரும் ஆக மொத்தம் ஐந்துபேர் வள்ளியுரை தலைநகராகக் கொண்டு தென்பாண்டி நாட்டை ஆட்சி செய்துள்ளனர்
  • கி.பி.1268-1311 கி.பி 1293ல் மாறவர்மன் குலசேகரப்பாண்டியனின் 25வது ஆட்சி ஆண்டின் கங்கை கொண்ட சூரிய தேவன் வாணாதி ராயன் கல்வெட்டில் இவ் வள்ளியூரில் கருமாணிக்க ஆழ்வார் கோவிலில் சங்கப் பெருமாளை எழுந்தருளச் செய்து நம்பிக்கு கோவில் செய்து திருக்குழலுதின பிள்ளையாரை எழுந்தருளுவித்ததாக இளையான்குடி மதன கோபாலசாமி கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது..
  • இவ்வூர் பெருமாள் கோவிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
  • 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் சிறிது காலம் இவ் வள்ளியூரில் வாழ்ந்து தான் வழிபட்டு வந்த சரஸ்வதி அம்மனின் திரு உருவச் சிலையை சேர மன்னனுக்கு இவ்வூரில் வைத்து பரிசாக வழங்கியுள்ளார் அந்தச் சிலை தற்பொழுது பத்மநாதபுரம் அரண்மனையில் உள்ளது. ஓவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவுக்கு கேரளா அரசு மற்றும் தமிழ் நாடு அரசு சார்பாக கூட்டு வழிப்பாட்டுக்காக கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரத்திலுள்ள பூஜைப்பிறை என்ற இடத்திற்கு பிரமாண்ட ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மேற்படி வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • வள்ளியுரின் வடபுறத்து வாயிலில் உள்ள அம்மன் கோவிலை (மூன்று யுகம் கொண்ட அம்மன் கோவில்) “உலகமுழுதுடையாள்” என்ற சாந்திகூத்தி கட்டியுள்ள செய்தி அங்குள்ள வீரபாண்டியன் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • கி.பி.1382-1444 வரை தென் திருவிதாங்கூர் அரசர் உதய மார்த்தாண்ட வர்மன் இங்கு தங்கி இருந்து இப்பகுதிகளை ஆட்சி செய்துள்ளார்.
  • கி.பி.1734ல் களக்காடு கோர்க்குடி, வள்ளியூர் ஆகிய இடங்களும் திருவாங்கூரின் வட எல்லையாக அமைந்துள்ள கோட்டாரக்கரை பத்மநாதபுரம் முதலிய இடங்களை திருவாங்கூர் மன்னர் ஒன்றாக இணைத்து ஆட்சி செய்துள்ளார்.
  • கி.பி.1752ல் தளவாய் இராமப்பையன் முயற்சியில் திருவாங்கூர் மகாராஜா கன்னியாகுமரிக்கும் களக்காட்டிற்கும் இடையே வள்ளியூர் உட்பட 30 மைல் பரப்புள்ள இடத்தை போதுமான பொருள் கொடுத்து ஆற்காடு நவாபின் வைசிராய் முடிமையாவிடமிருந்து வாங்கியுள்ளார்.