Icon

வள்ளியூர் அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புராண சிறப்புகள்

  • நெல்லை மாவட்டத்தில் பெரிய குகைக்கோவில்.
  • குகை அமைந்துள்ள குன்றின் பெயர் பூரணகிரி.
  • மாயம் நிறைந்த கிரவுஞ்சாசூரனின் தலைப்பாகமாக இது கருதப்படுகிறது
  • திருசெந்தூர் முருகனின் திரு உருவைப் போல் இவ்வூர் முருகன் வலது முன்கையில் பூவை வைத்து, வலது பின்கையில் சக்தி என்ற ஆயுதம் தாங்கி இடது முன்கையை தொடையில் வைத்து ,இடது பின்கையில் வச்சிரம் என்ற ஆயுதம் தாங்கி காட்சி தருவது தனிச் சிறப்பு.
  • வள்ளி கேட்ட வரத்தின் படி முருகன் வள்ளியை திருத்தணிகையில் மணமுடித்து தென்கோடியில் உள்ள பூரணகிரி மலைக்குகையில் வள்ளியுடன் வந்து அமர்ந்தார். இம்மலையை அடுத்த ஊர் வள்ளியூர் என்று வழங்கலாயிற்று.
  • வள்ளிக்கு மட்டும் தனியே சன்னதி இருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
  • முருகன் அகத்தியருக்கு நான்கு வேதங்களை உபதேசித்ததால் இங்குள்ள முருகன் கிழக்கு முகமாகவும் சிவன் மேற்கு முகமாகவும் காட்சி தருகின்றனர்.அகத்தியர் இதை உணர்த்தவே சிவனை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்துள்ளார்.
  • இம்முருகனை தேவேந்திரன் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்துள்ளார்.
  • நாரதர், தேவேந்திரன், அகத்தியர்,அருணகிரிநாதர்,காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் ,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,ஞானியாரடிகள்,வேலாண்டி பரதேசி மற்றும் வேலாண்டி தம்பிரான் ஆகியோர் அருள் பெற்ற திருத்தலம் இது .