வள்ளிமலையில் வள்ளிகிழங்கு அகழ்ந்து எடுத்த குழியில் மான் வயிற்றிலிருந்து விழுந்து அவதரித்த வள்ளி முருகனிடம் கேட்டவரத்தின்படி வள்ளியை முருகன் திருத்தணிகையில் மணமுடித்து தென்கோடியிலுள்ள பூரணகிரி என்ற மலைக்குகைக்கு வள்ளியூடன் வந்து குடிகொண்டு அனைவருக்கும் அருளை வாரி வழங்கும் அம்மலையை அடுத்த ஊர் வள்ளியின் பெயரால் வள்ளியூர் என அழைக்கப்படுகிறது.