விஜயாலய சோழர்களின் ஏகாதிபத்திய ஆக்ரமிப்பு கொள்கைக்கு எதிப்பு தெரிவிக்க முனைந்த பாண்டியர்கள் ஐந்து பாண்டியர்கள் ஆனார்கள். அதன் பிறகு முஸ்லிம் அரசர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க கன்னடியர்களின் உண்மையான நோக்கத்தை தென்பாண்டி நாட்டு மக்கள் உணராததாலும் கன்னடியர்கள் பாண்டியர்களின் எதிரிகள் என்று தவறாக எண்ணியதாலும் தொடர்ந்து அவர்கள் ஐந்து பண்டியர்களாக இருந்து கன்னடியர்களை எதிர்த்து போரிட்டனர்.

நமது பாரத நாடு மிகப் பழமையான நாடு,இராமாயணம் ,மஹாபாரதம் போன்று காவியங்களையும் பல சரித்திரங்களையும் தன்னகத்தே கொண்ட தனிசிறப்புடையது. புறானகாலத்சில் இருந்தே ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளும் பல மன்னர்களால் அரசாலபட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக நாட்டில் எல்லா மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்களும் , கோட்டைகளும் , பல வரலாற்று நூல்களும் அதன் சிறப்பை இன்றும் உலகுக்கு பறை சாற்றி கொண்டு இருக்கிறது . நமது நாட்டின் தனிசிறப்பு வாய்ந்த தமிழகத்தின் தென் பகுதில் வீரம் செறிந்த திருநெல்வேலி சீமையில் தென் குமரி கடலோரம் காஷ்மீர் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ராதாபுரம் தாலுகாவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம் முருக பெருமானின் குடைவரை கோவில் கொண்ட வள்ளியின் பெயரால் அமைந்து உள்ள ஊர் வரலாற்று சிறப்பு மிக்க வள்ளியூர் . இவ்வூர் கி.பி. நூற்றாண்டில் அள்ளியுண்ட ராஜாவால் பிரபல்படுதப்பட்டதால் அள்ளியூர் எனவும் , இங்கு மிகபெரிய சமணப்பள்ளி இருந்ததால் பள்ளியூர் எனவும் . இவ்வூரில்உள்ளி (சிறிய வெங்காயம்) அதிக விளைச்சல் செய்வதால் உள்ளியூர் பெயர் பெற்ற சிறப்பை பெற்ற ஊராகும். கி .பி. 1164-1190 மாறவர்மன் ஸ்ரீ வல்லபன் வள்ளியூரைத் தலைநகராகக் கொண்டு கிழ வேம்பநாடு . மேல வேம்பநாடு ஆகியவற்றை ஆட்சி செய்துள்ளார் இவ்வாறு தென்பாண்டிநாட்டின் தலைநகராக இவ்வூர் இரு முறை அமைந்த சிறப்பை பெற்றுள்ளது மதுரையை தலை நகராக கொண்டு ஆட்சி புறிந்து வந்த மாலையம்மையின் புதல்வர்கள் குலசேகர பாண்டியனும் அவரது சகோதரர்கள் , குலசேகர பாண்டியன் முத்தம் பெருமாள் முகிலம் பெருமாள் முடிசூடும் பெருமாள் பாண்டிப் பெருமாள் , ஆகிய ஐவரும் ஐவராஜாக்கள் என அழைக்கப்பட்டனர் . மாலையம்மையின் புதல்வர்களான ஐவராஜாக்கள் வள்ளியூர் கொல்லம் வள்ளியூரில் கோட்டை அமைத்து சிறப்பாக ஆட்சி புறிந்து வந்தனர் . குலசேகர பாண்டியன் கலைகுத்தாடி ஒருத்தியை காதலித்து மணமுடித்து தனது பட்டத்து அரசியாக்கி அவருக்கு உலக முழுதுடையாள் பட்டத்தையும் வழங்கினான் .
இவ்வாறு ஆட்சி புரிந்துவரும் வேலையில் தமது அரண்மனையில் விருந்தாளிகளுக்கு விருந்தளிக்க தனது படை வீரிகள் வேட்டைக்கு அனுப்பினான் அப்போது வேட்டை வீரர்களின் நாய்களை துரத்தி சென்ற முயல் ஒரு இடத்தில் திரும்பி துரத்தி வந்த நாய்களை எதிர்த்து .நாய்கள் நாலாபுறமும் சிதறி ஓடியது . இதனைக் கண்ட வீரர்கள் கலக்முற்று வந்து குலசேகர பாண்டியனிடம் விபரத்தை சொல்ல மன்னன் குலசேகர தனது அரண்மனை ஜோதிடர்களை காவலர்களுடன் அழைத்து சென்று முயல் நிற்கும் இடத்தை கண்டனர் .
அப்போது ஜோதிடர் பரல் போட்டு பார்த்து மன்னா குலசேகரபாண்டியனே இப்பூமி வீரம் நிறைந்தது இப்பூமிகில் ஏதோ ஒரு சக்தி இருப்பதுபோல் ஏன சொல்ல பாண்டிய மன்னன் தனது வீரர்களை விட்டு அந்த இடத்தை தோண்டும்போது அங்கே வீரம் செறிந்த மங்கை முன்றுயுகம்கண்ட அம்மன் காளி இருப்பதை கண்டு அவளை தனது அரண்மனையில் காவல் தெய்வமாக வைத்து வழிபட்டு வந்தான் . அக்காளியும் அவனுக்கு துணையாக இருந்து வந்தாள் இந்நிலையில் குலசேகரபாண்டியனும் அவனது தம்பிமார்கள் ஐவ்வரும் சேர்த்து மதுரைக்கு சென்றனர் . செல்லுமுன் வள்ளியூரை
என்ற தனது அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர் ஐவராஜாக்கள் சென்ற பின்பு நாட்டில் அரம் குன்றியது அரசானை மீறப்பட்டது. நாடு மிகவும் மோசமனநிலைக்கு சென்றது .
இச்சூல்நிலையில் வேம்பனுரில் ஆத்திக்குட்டிபூமாலைக்கு மகனாக பிறந்து வளர்ந்து வந்தவன் வினாதி வினன் . இவன் சிறு வயதில் தை தந்தை இழந்து தனது உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேற வள்ளியூர் வந்துசேர்தான் இங்கு பிழைப்புக்கு வழியின்றி தன்னை குலசேகர பாண்டியன் பிரதிநிதி என அறிமுகம் செய்து கொண்டு மக்களுக்கு பல வரிகள் விதிதான் . அவை தண்ணிர் எடுத்து செல்லும் பெண்கள் கை வீசி நடக்கும்போது ஒரு விச்சுக்கு ஒரு வரி , திருமண வரி பிணத்தை எரிக்க சாவு வரி போன்றவை அடங்கும் . இவனை கண்டு அனைவரும் பயந்து வரிகளை செலுத்தி வந்தனர்.
குலசேகர பாண்டியன் தனது தம்பிமார்களுடன் வள்ளியூர் திரும்பினர் . அன்று இரவு மன்னன் குலசேகரன் நகர் வலம் செல்லும் போது மக்கள் விணாதி வினன் பற்றியும் அவன் விதித்துள்ள வரிகள் பற்றியும் ஒரு சாவு ஒரு முதாட்டி அழும்போது விணாதி வினன் வருவனே வரி கேட்பனே .கொடுக்க காசு இல்லையே கடவுளே . என சொல்வதை கேட்ட மன்னன் அத்ர்ச்சியுற்று மறுநாள் அரசவையில் விணாதி வினன் பற்றி விசாரித்தான் அவனை அழைத்து வர சொல்லி காவலர்களுக்கு ஆணையிட்டான் . அப்போது விணாதி வினன் மன்னனிடம் தான் யார் என்பதையும் நாட்டில் நடந்த விபரங்களை சொல்லித்தான் செய்த தவறை உணர்ந்தான் மன்னிப்பு கேட்டான் . மேலும் அரசனிடம் தாம் வசூலித்த காசுகளை ஒப்படைத்து அதை முன்றாக பிருது ஓன்று மக்களுக்கும், அரசுக்கும் , மற்றொன்று ஆலய திருப்பணிகள் செய்யவும் விரும்புவதாக கூறினார் . மன்னன் குலசேகரனும் அவ்வாறே செய்து . விணாதி வினனை தனது இளையமந்திரியாக நியமித்தான். அரசாட்சி செய்து வரும் வேலையில் பிழைப்புக்காக ஊர் ஊராகச் செல்லும் பாண்டரும் ஒருவன் குலசேகர பாண்டியன் படத்தை வரைக்க கன்னடிய அரண்மனையில் கொடுத்து அப்படத்தை கண்ட இளவரசி குலசேகரன் மிது காதல் வயப்பட்டு அவளையே மணக்க வேண்டும் . என மனதில் தீர்மானித்து தன் தந்தையிடம் கூற கன்னடிய மன்னன் தனது ஒற்றன் முலம் தனது மகளை மணம் செய்து கொள்ளுமாறு தூது அனுப்பினான் . இதற்கு குலசேகரன் மறுத்து விட்டதால் அவன் மிது கன்னடியபடைகள் படையெடுத்து சென்றன . அப்போரில் கன்னடியபடைகள் தோல்வியுற்று வள்ளியூரை சுற்றி வளைத்து குலசேகரன் கோட்டை வாசல் திறக்கும் குலசேகரன் வருவான் என்று பார்த்து பல ஆண்டுகள் காவல் இருந்தது . ஆனால் கோட்டை கதவும் திறக்கவே இல்லை குலசேகரனையும் காணவில்லை இதனால் கன்னடிய மன்னன் செய்வதறியாது இருக்கும் வேலையில் .
தினமும் மோர் விற்க்கும் இடக்கி பெண் ஒருத்தி கன்னடிய படைவீரனுக்கு மோர் விற்பது வழக்கமாக கொண்டிருந்தால் ஒருநாள் மோர் கொடுக்கும் குவளையை வள்ளியுரின் மேற்கு பகுதியில் இருக்கும் சீவலப்பேரி எனும் பெரிய குளத்தில் சுத்தம் செய்யும்போது தண்ணிர் சுழலில் தவறவிட்டு அழுது புலம்பினாள் அவளை கன்னடிய வீரர்கள் சமாதானம் செய்து அனுப்பினர். மறுநாள் வழக்கம்போல் மோர் விற்க கோட்டைக்குள் சென்ற போது அரண்மனையில் உள்ள நீராவி எனும் குளத்தில் தான் தவறவிட்ட குவளை மிதப்பதை கண்டு அதை எடுத்து கொண்டு தாம் செல்லும் வழியில் இருந்த கன்னடிய வீரர்களிடம் வெகுளித்தனமாக தனது குவளை பாண்டியன் கோட்டையிலுள்ள நீராவியில் கிடைத்தது என சொல்ல கன்னடிய வீரர்கள் கோட்டைக்கு குடிநீர் இங்கு இருந்துதான் செல்கிறது என்பதை தெறித்து கொண்டனர். உடனே கன்னடிய வீரர்கள் மடையை அடைக்க முயலும் போது அம்மடைக்கு காவலாக ஐவராஜாகளால் அமைக்கப்பட்ட கங்காலநாதர் என்கிற செவிட்டு பூதம் அடைக்க விடாமல் தடுத்தது உடனே கன்னடிய மன்னன் மாந்திரிகன் மூலம் இம்மடைக்கு காவலாக இருந்த கங்காலநாதர் என்கிற செவிட்டு பூதத்தையும் கோட்டையிலுள்ள நீராவி குளத்திற்கு தண்ணீர் வந்துவிழும் மடைக்கு காவாலாக சங்கிலி பூதத்தாரையும் அமைத்துள்ளான் என்பதை தெரிந்து கொண்டு மேலும் இப்பூதத்திற்கு நரபலியும் ஒரு யானனயையும் பலிகொடுத்தால் இம்மடையை அடைக்க முடியும் என சொல்ல கன்னடிய மன்னனும் அவ்வாறே செய்தான் பூதம் திருப்தி அடைந்தது கன்னடிய படைகள் மடையை அடைத்தது.
இதன் பிறகும் குலசேகரபாண்டியன் ஓராண்டு வரை கோட்டையில் இருந்து வெளிவரவில்லை அதன் பிறகு கோட்டைக்கு காவலாக இருந்து வரும் காளி பற்றியும் அவள் கோட்டைக்குள் இருக்கும் வரை குலசேகரபாண்டியனை ஒன்றும் செய்ய இயலாது என்பதை தெரிந்து கொண்ட கன்னடிய மன்னன் தனது ஒற்றனை கோடாங்கிக்காரன் போல் கோட்டைக்குள் அனுப்பி மன்னா உனக்கு வரும் இடையுறுக்கு காரணம் உன் கோட்டைக்குள் இருக்கும் காளிதான் அவளை கோட்டைக்கு வெளியே கொண்டு வைத்து விடு நீ நிம்மதியாக வாழலாம் என சூழ்ச்சியாக கூற அதன்படி காளியை கோட்டைக்கு வெளியே வடக்கு வாசலில் கொண்டு வைத்து விடுகிறான்.அதன் பிறகு நடந்த போரில் குலசேகரபாண்டியன் தோல்விற்று மேற்கு மலை தொடரில் கோட்டை ஒன்றை கட்டி அங்கிருந்து அவ்வப்போது கன்னடியர்களுடன் போரிட்டு வந்தனர். குலசேகரபாண்டியன் மேற்கு மலை தொடரில் இருப்பதை ஒற்றன் மூலம் அறிந்த கன்னடிய படை மேற்கு மலைக்கு படை எடுத்து சென்றது அங்கு நடந்த கடுமையான போரில் தனது சகோதர்களையும் படை வீரர்களையும் இழந்தான் குலசேகரபாண்டியன். இப்போரில் தலை இல்லாத வீரர்களின் முண்டங்கள் ஆற்றில் ஒதுங்கிய இடம்தான் இப்பொழுது முண்டந்துறை என அழைக்கபடுகிறது.
பின்பு குலசேகரபாண்டியன் கன்னடிய வீரர்களால் சிறைபிடிக்க பட்டு கன்னடிய இளவரசியை மணமுடித்து வைக்க பல்லாக்கில் கொண்டு செல்லும் வழியில் தான் அணிந்திருந்த வைர மோதிரத்தை உட்கொண்டு தெய்வ நிலை அடைகிறான்.இதை அறியாத கன்னடிய வீரர்கள் பல்லாக்கை இறக்கி பார்க்கும் போது குலசேகரபாண்டியன் இறந்து இருப்பதை அறிந்த கன்னடிய இளவரசி தன்னை மன பெண்ணாக அலங்கரித்து கொண்டு குலசேகரபாண்டியன் உடலுக்கு மாலையிட்டு அவருடன் உடன் கட்டை ஏறி தெய்வ நிலை அடைகிறாள்.
அவள் உடன்கட்டை ஏறிய இடம் கன்னடிய இளவரசி நினைவாக வடுகச்சி மலை என அழைக்கபடுகிறது. அங்கு வடுக அம்மன் கோவிலும் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் வெள்ளை சிவப்பு என இரு நிறங்களில் பால் வருவது அதிசயமான ஒன்று.இவர்கள் மன்னராஜா எனவும் தீப்பாச்சி அம்மன் எனவும் இன்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய காவல் தெய்வமாக விழங்குகிறார்கள்.
இவர்களது சிற்ப நடுக்கல் கங்கைகொண்டான் ,கயத்தாறு,வள்ளியூர்,திருநெல்வேலி,தெற்கு வள்ளியூர்,பணகுடி,நாகர்கோயில் பகுதிகளில் உள்ளது . மேற்கு மலைத்தொடரில் உள்ள பாண்டியன் கோட்டை,கொட்டுந்தளம்,முண்டந்துறை,வள்ளியூரில் உள்ள மூன்றுயுகம் கொண்ட காளி கோவில் ,கோட்டை விளை பகுதி,கோட்டையடி,இளவரசன் பாறை ,பாண்டியராஜா கோவில் ,மீனாச்சி சொக்கநாதர் ஆலயம் ,வீணாதிவீணன் சிற்பம் ,கருப்பநேரி அய்யனார் கோவில் ,கங்காலநாதர் பூதம், வள்ளியூரில் மேற்கு பகுதியில் உள்ள பெரிய குளம்,கள்ளமடையின் சிதைந்த பகுதி ,நீரவிக்கரை சுடலை மாடசுவாமி கோவில்,நீரவிக்கரை சங்கிலி பூதத்தார் சிற்பம் ஆகியவை இவ்வீர வரலாற்று காவியதிற்கு சான்றாக விளங்கிறது.